சாதனையாளர்களைப் பார்த்து நாம் வியக்கும் ஒரு விசயம் இவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள். என்னால்… சாதிக்க முடியவில்லை. என்ற எண்ணம் தான் முன் வைக்கப்படும்.
சாதனையாளர்கள் ஒரே நாளில் எதையும் சாதித்து விடுவதில்லை. அவர்களின் முயற்சி, உழைப்பு அவர்களின் பின்னால் இருக்கிறது.
ஒரு செயலை செய்ய அவர்கள் எண்ணியவுடன் செய்து இருப்பார்கள். அதை தள்ளி போட மாட்டார்கள். அதற்கான நேரத்தை ஒதுக்கி அந்த முயற்சியில் முழு மனதுடன் ஈடுபடுவார்கள். அந்த ஈடுபாடு அவர்களை சாதனையாளராக ஆக்கி இருக்கும்.
நம்மில் எத்தனை பேர் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டு நாளை செய்யலாம், அல்லது நாளை மறுநாள் செய்யலாம், என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம் .
பிறகு அந்த செயலைச் செய்யவே மாட்டோம். மறந்திருப்போம். சிலர் நாம் இந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை போட்டு வைத்திருப்பார்கள்.
அதை செய்ய முதலில் ஆர்வத்துடன் செய்வார்கள். பிறகு அதை படிப்படியாக தள்ளி போட்டு விடுவார்கள். அந்த தள்ளி போடுவதனால் நாட்கள் கடந்து விடும். அந்த முயற்சியை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
பின் மற்றவர்களைப் பார்த்து நம்மால் செய்ய முடியவில்லை. என்று வருத்தப்படுவார்கள்.
வீண் பேச்சுகள், வீண் பொழுதுபோக்குகள் இவற்றில் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டு எதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ!அந்தச் செயலை செய்யாமல் விட்டுவிட்டார்கள்.
வெற்றி பெறுபவர்கள் ஒருபோதும் காலத்தை வீணடிப்பது இல்லை. வெற்றிக்கான வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க அதிகப்படியான முயற்சிகளை மேற்கொள்வார்கள். அன்று முடிக்க வேண்டிய காரியத்தை தள்ளிப் போடாமல் குறித்த நேரத்தில் அந்த காரியத்தை செய்து முடிப்பார்கள்.
வெற்றிபெற போராடுபவர்கள் அதிகப்படியான நேரத்தில் எந்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ!அந்த செயலில் தங்களது நேரதை செலவு செய்வார்கள்.
அவர்கள் ஒருபோதும் தேவையில்லாத காரியங்களை செய்ய மாட்டார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து பிறரைப் போல் வாழ வேண்டும் என்று அதிகப்படியான ஆசைகளை வளர்த்துக் கொண்டு தேவையில்லாத செலவுகளை செய்து சிக்கனத்தை மறந்து ஆடம்பரத்தை விரும்புபவர்கள் தாங்கள் உழைத்த சேமித்த பணங்களையும் விரயம் செய்து மன உளைச்சலுக்கு ஆளவார்கள்.
அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை எனக்கு நேரம் சரியில்லை. நான் எதை செய்தாலும் அது சரியாக இருப்பதில்லை. என்று நேரத்தையும், பிறரையும் குற்றம் சொல்வார்கள். தான் செய்த தவறை உணர மாட்டார்கள்.
எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் இருக்கிறது. ஒரு செயலை திட்டம் போட்டு தள்ளிப் போடாமல் செய்பவர்கள் வெற்றியாளர்கள். அந்த செயலை செய்யாமல் தள்ளிப் போடுபவர்கள் வெற்றி பெறுவது இல்லை .
எனவே. நாம் என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை தீர்மானித்து, சிறிது சிறிதாக அரிசியை எடுத்து ஒழுங்குடன் சேமிக்கும் எறும்பு போல் சிறுக சிறுக செய்தாலும் ஒரு நாள் அவர்கள் வெற்றியாளராக சாதனையாளராக இருப்பார்கள்.
ஒரு மரத்தின் வேர் கண்ணுக்குத் தெரியாது. அந்த மரம் வளர்ந்து இறப்பது மட்டுமே தெரியும். பசுமையான அந்த மரத்தில் பூ, காய், பிஞ்சு, கனி என பிறருக்கு கொடுக்கும் அந்த வேர் அந்த மரத்தையே தாங்கும் ஆணிவேராக பூமிக்கு அடியில் இருப்பது கண்ணுக்குத் தெரியாது.
அது போல் தான் ஒரு வெற்றியாளரின் பின் அவன் முயற்சி, தொடர் முயற்சி, உழைப்பு இருக்கும் அந்த உழைப்பே, அவனை உயர்த்தி இருக்கும் .
நீங்களும் முயற்சி செய்யுங்கள் நீங்களும் வெற்றியாளர் தான். முடியாதது என்று எதுவும் இல்லை. இந்த உலகில் முயற்சி செய்யுங்கள் நீங்களும் சாதனையாளர் தான்.