காலத்தால் அழியாதது கள்வரால் எடுக்க முடியாது நீரால் கரையாதது
நெருப்பால் எரியாது.
மனதில் இருப்பது
மதிப்பை கொடுப்பது
பண்பை தருவது
பார் புகழ வைப்பது.
கொடுத்தால் குறையாது கொடுக்க கூடுவது
கண்ணாய் இருப்பது கல்வியாய் வந்தது.
சூரியனைக் கண்டு மலரும் தாமரை போல்….
மாணவமாணவியரின்வளர்ச்சி கண்டு மலரும் ஆசிரியர்களே அறியாமை இருளில் இருப்பவர்களுக்கு
அறிவு ஒளி கொடுக்கும் ஆசிரியர்கள்.
ஒற்றுமை விழுதுகள் வேரூன்றி
தேசம் எல்லாம் பரவி
உங்கள் பெயர் சொல்லும் ஆசிரியர் தினத்தில்…
கண்ணனின் கானகீதத்தை குழலிலே கேட்கவும்..
குயில் கூவும் சங்கீதத்தை பாடும் குரலிலே கேட்கவும்
வீணையின் சுரராகத்தை விரல் அசைவில் கேட்டிடவும் யாழின் இசை நாதத்தை தலையசைத்து கேட்கவும்
சிவதாண்டவத்தை சிரம் தாழ்த்தி பார்த்திடவும் பாக்கியம் செய்த நாங்கள் பண்புடனே வந்துட்டோம்.
அறிவு என்னும் சுடர் விளக்கு ஏற்றி நீங்கள் மகிழ்ந்திடவே அணையா விளக்காய் நீங்கள் அனைத்தையும் கற்க நாங்கள் .
ஆண்டு தோறும் வருவதுண்டு ஆசிரியர் தினம் ..
அகம் மகிழ்ந்து பாடிடுவோம் அன்பில் நெகிழ்ந்து.