இவர்கள்….
இந்த நூற்றாண்டில் இளைய தலைமுறை!
ஆம் !இவர்கள் இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை!
இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை!
நாட்டை காக்க பாடுபட்டது அன்றைய தலைமுறை! உயிரினைக் காக்க பாடுபட்டது இன்றைய தலைமுறை!
40 பேர் ஓர் இடத்தில் கூடி உள்ளன்
சங்கமித்து உள்ளனர்
விளைவு சங்கம் அமைத்து உள்ளனர்
இங்கே இவர்கள் உள்ளங்கள் சங்கமம் ஆகி உள்ளனர். இச்சங்கத்திலிருந்து பிறப்பது சண்டைகள் அல்ல !
கூச்சல்கள் அல்ல !
விசில் சத்தங்கள் அல்ல !
ஆம் இங்கே….
இதயத்தின் துடிப்பு !
உயிரின் கீதம் !
ஆம்……
மழைத்துளி சேர்ந்தால் வையம் தழைக்கும் !
இரத்த துளி சேர்ந்தால் மானிட உடல் தழைக்கும்
இவர்கள் செய்தது 100 , 200 யூனிட் ரத்தம் கொடுத்தது
இந்த இரத்த துளிகள் என்றும் நிற்கப் போவதில்லை!
இலட்சமாகும் வரை
ஏன் என்றால் இவர்கள் இலட்சியவாதிகள்.
ஆம் சிந்தியுங்கள் இந்த இலட்சியத்தில் நமது பங்கு என்னவென்று !
இது ஒரு புதிய சாதனை! நாளை தலைமுறை
சொல்லும் சாதனை! தலைநிமிரச் செய்யும் சாதனை! இப்படி இளைய சமுதாயம் நாட்டுப்பற்று தொடர்ந்து கொண்டே உள்ளது.