உதிரத்தை பாலாக்கி கொடுத்து வளர்க்கும்
ஊட்டம் நிறைந்த பால் போல் தமிழ் பால் கொடுத்து நாடுஉயர
தமிழில் கல்வி கற்பது நன்று
பள்ளும், பண்ணும் தோன்றம் மண்ணில் தோன்றிய மூத்த தமிழ்
பார் புகழும் வள்ளுவன் படைத்த
புதையல் போன்ற பொக்கிசத் தமிழ்
பகுத்து அறிந்து பண்பை வளர்க்கும்
அன்புத் தமிழ் நம் தமிழ் இயற்கை எல்லாம் இயக்கித் தந்த
இலக்கியத் தமிழ் காப்பியத் தமிழ்
அண்டை நாட்டினர் என எண்ணாது
அன்புடன் அனைத்தும் அன்புத் தமிழ்
அறிவியல் விளக்கங்களை அறிந்து நுணுக்கங்களை ஆராய்ந்து
அறிவித்த தமிழ் அறிவியல் தமிழ்
எண்ணற்ற சிந்தனையை எடுத்துச் சொல்லி
எழுதி வைத்த பழமைத் தமிழ் வானத்து கோள்களை அளந்து தெரிந்து சோதிடத்தில் நுழைத்த சோதிடத் தமிழ்
உலகம் உருண்டை என்று ஆண்டாள்
உணர்த்திச் சென்ற கோலத் தமிழ்
உலக மொழியில் நிலைக்கும் மொழி
பழைய மொழி தமிழ் மொழி.