காலை கதிரவன் உதிப்பது நமக்காக
காற்றும் மலையும் உலக நன்மைக்காக
மாலை மறையும் ஒளியின் நிறமும்
வான வில்லின் ஏழு வண்ணமும்
சாலை மரமும் செடியும் கொடியும்
மலையும் குன்றும் குறிஞ்சி முருகனும்
பாலை மணலும் ஓடை நிழலும்
பயணம் செய்பவர் மகிழும் இயற்கை.
பஞ்சம் இல்லாமல் உலகம் வாழ
பறக்கும் பறவை குரலில் இசை
நஞ்சை பயிரின் பசுமை புரட்சி
மக்கள் மகிழ்ந்து பாடும் இசை
மஞ்சள் மா பலா கனிகள்
மரங்கள் கொடுக்கும் கொடை உள்ளம்
மஞ்சையில் அமர்ந்த முருகன் மலையும்
அருள் கொடுக்கும் கொடை உள்ளம்.
ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ
இயற்கை கொடுத்த இனிய கொடை
நன்கு புரிந்து நாமும் வாழ
இயன்ற அளவு செயற்கை தவிர்ப்போம்
கன்று போல் துள்ளி விளையாடி
காணும் காட்சிகள் கண்டு ரசித்து
இன்று போல் என்றும் வாழ
இயற்கை உடன் இணைந்து வாழ்வோம்.