தவழ்ந்து எழுந்து ஓடி விளையாடி
இன்புற்று இருக்கும் இனிய பருவம்
தவறு என்று தெரியாமல் செய்து
தடைகளைத் தாண்டும் குறும்பு பருவம்
உவகை கொண்டு அன்பு செலுத்தி
உறவு விரிய பாசம் காட்டி கவரும் கண்ணன் நேசப் பருவம்
விரும்பி குறும்பு ரசிக்கும் பருவம்.
படிப்பு பாட்டு நடிப்பு என
நளினமாய் நடமாடி விளையாடி மகிழ்ந்து
அடி வாங்கி அடம் பிடித்து
பார்த்ததே வாங்கி பிடித்து சேர்த்து
துடிப்புடன் துருதுருப்பாய் துள்ளும் பருவம்
பாம்பையும் பிடிக்கும் பயமறியா பருவம்
மடி. மெத்தையாக்கி கதை கேட்டு
கேள்வி கேட்டு துளைக்கும் பருவம்.
துணிவு கொண்டு ஏறி இறங்கி
துச்சமாய் எதையும் செய்யும் பருவம்
ஆணித்தரம் இல்லா ஆசைப் பருவம்
செய்வதை செய்யும் கிளி பிள்ளையாய்
ஆணி வேராய் பதியும் பருவம்
இன்னல் அறியா உள்ளம் கொண்டு
பணிவு காட்டி நேசம் கொள்ளும்
கள்ளம் இல்லா பிள்ளைப் பருவம்.