மானிடப் பிறவி அரிதிலும் அரிது
மதித்து வாழ்தல் மதிப்பின் உயர்வு
கானவன் கை பூமாலை போல்
கசக்கி வாழ்ந்தால் நிம்மதி போகும்
மானமான் போல் பெருமை கொள்ள
ஒழுக்கப் பண்பில் சிறக்க வேண்டும்
வானரி பசித்தாலும் புல் தின்னாது
தனித்த குணத்துடன் அஞ்சாது வாழ்ந்தால்.
அறக் கடவுள் அருகில் வருவார்
அன்பை பொழிந்து நன்மைகள் செய்வார்
உறவு பெருகும் உள்ளம் மகிழும்
உண்மை வாழ்வு நல்லறம் மாகும்
பிறவி பிறந்த பயன் அடையும்
நித்தம் நித்தம் நல்லதே நாடும்
பிறழ்தல் என்பது இல்லாமல் போகும்
பிழை என்றும் விலகி ஓடும்.
பண்புள்ள மனிதரை நாடு போற்றும்
பகைமை என்றும் இல்லாமல் போகும்
கண்டவர் கண்ணுக்கு தெய்வமாய் தோன்றும்
பூமாலை கழுத்தில் அணியாய் சேரும்
சண்முகன் அருளும் நாளும் கூடும்
சங்கடம் என்பது சந்தனமாய் மாறும்
கண்டவர் வணங்கி இவர் போல
யாரென்று சொல்லிப் போற்றி மகிழ்வர்.