கருவாய் உருவாய் வடிவாய் வந்தாய்
கையில் ஏந்தி உணர்வாய் உச்சிமுகர
மெருகேற்றி கைகால் அசைத்து அமுதாய்
சிரித்தாய் இன்பமும் துன்பமும் அறிந்தாயா?
துருவே வழித் தோன்றல் அல்லவா?
உன்முகம் பார்க்க துன்பம் அகளுமே!
தருவே பூமியை வளப்படுத்தும் கற்பகமே!
இசை கேட்டு மகிழ்ந்து துயில்பவளே!
வரமே நாங்கள் பெற்ற பயனே
பாதம் பிடித்து புதுநீராடச் செய்து
கரம் பிடித்து புத்தாடை அணிவித்து
வெண்சங்கில் மருந்து புகட்டி அமுதூட்டி
இரவு கண்விழித்து வளர்க்கும் போது
காணும்சுகம் பகிர்ந்து கொள்ள முடியாது
பரவசப் படும் தாய்மை சுகம்
துன்பத்திலும் இன்பம் காணுவதே சுகம்.
வளர்ந்து படித்து பெரிய பெண்ணாகி
சகோதரி மனைவி அண்ணி அத்தையென
வளம்வரும் போது நான்கு அவதாரம்
தோழி பாட்டி பூட்டி ஓட்டியென
வளம் வரும்போது எட்டு அவதாரம்
ஆணுக்குப் பின் இயக்க சக்தி
குளம்படி பட்ட சிவனின் சக்தி
பாரதி கண்ட புத்தொளி சக்தி.