தாய் தமிழே உன்னை நேசித்தேன்
தரணியில் உன் புகழ் பரப்ப சேய் மனத்தால் நினைத்து புகழ்ந்தேன்
சென்ற இடமெல்லாம் மூச்சாய் சுவாசித்தேன்
வாய் உன்னைப் பாடிப் பேச
வளர்வது தமிழும் நாமும் தான்
நோய் கூட தூரப் போகும்
தமிழ் மருத்துவ உணவு உண்டால்.
பார் புகழும் திருக்குறள் திருவருள்
உலகம் வியக்கும் தமிழ் மொழி
பேர் சொல்ல தமிழ் படிப்போம்
இருக்கும் வரை மூச்சாய் சுவாசிப்போம்
நேர்பட வாழ வழி காட்டும்
நிம்மதி கிடைக்கும் இயங்க வைக்கும்
தேர் போல இழுத்துச் செல்வோம்
ஒன்று பட்டு உறுதி கொள்வோம்.
தமிழ்த்தாய் அணிகலன் தமிழன் பொக்கிசம்
தரணி புகழ்ந்து பாடும் பெட்டகம்
உமிழ் நீரும் இனிக்கும் இதயம்
இயங்க சக்தியாய் மாறும்
தமிழ்
சிமிழ்பு நம்மை சீரமைக்கும் நெறிப்படுத்தும்
சிரஞ்சீவி ஆக்கம் சிந்தனை பெருக்கும்
திமிர்தல் தமிழ் மொழி ஆனால்
தரணியில் உயர்வது நாமும் தான்.