ஆண்பெண் பந்தபாச உறவு நீ !
ஆண்டவன் படைத்த கரு நீ !
விண் மழையும் பொழிவது தெரியாது?
மண்ணில் நீ வருவதும் தெரியாது?
கண் இமைக்கும் நேரத்தில் பிறப்பாய்
காலம் நேரம் சொன்னாலும் மாறும் பெண் முழுமை அடைவது உன்னால்
தாய்மை தந்த சிசு நீ!
பத்து மாத பந்தம் நீ!
உந்திக் கொடி உறவு நீ! சொத்தாய் வந்த சொர்க்கம் நீ !
துடித்து உறவாடும் உறவு நீ !
முத்தாய் வளரும் முழு நிலவு நீ !
முகம் தெரியாத பாசம் நீ! பித்தா இருக்கும் துடிப்பு நீ!
பேதை அறியும் புதுஉறவு நீ!
இரத்த உறவு பந்தம் நீ!
சுகம் தரும் சுகந்தம் நீ! வரவாய் வரும் வாழ்வு நீ!
வாழும் வாழ்வின் அர்த்தம் நீ !
திரவியமாய் வந்த பொன் நீ!
திடத்தை கொடுக்கும் குழந்தை நீ !
வரமாய் வந்த வரவு நீ!
வளம் கொடுக்கும் வசந்தம் நீ.