ராட்டையைச் சுற்றி நூல் நூற்று
கைத்தறி ஆடை அணிந்த காந்தி
மாட்டை சுழற்றி செக்கிழுத்து சிறையில்
இருந்து நாட்டை நேசித்த
வ. உ. சி
பாட்டை சுழற்றி பாட்டு இசைத்து
வந்தே மாதரம் பாடிய பாரதி நாட்டை நேசித்து கதர் ஆடை அணிந்து
அன்னியத் துணியை எரிந்ததும் தேசபக்தி.
பருத்தியை விதைத்து பஞ்சை பிரித்து
நூலாக்கி வண்ணம் கொடுத்து வகைப்படுத்தி முருக்கி உளர்த்தி எடுத்து நெய்து
உடுத்த உறங்க இருக்க துவட்ட
வருத்தி கையும் காலும் வேலையில்
தறியில் துணி நெய்து எடுத்த
வருத்தம் தெரியாமல் கொடுக்கும் போது
விரும்பி அணிவதே இவர்களின் வாழ்வாதாரம்.
இன்று ஒரு கையும் காலும்
வேலை செய்யும் எந்திரம் ஆகிய
வென்று தானியங்கும் எந்திரம் ஆகிய
உயர்ந்த கைத்தறி பட்டு மாகி சென்று பல இடங்களில் பெயருமாகி
என்றும் கைத்தறி பாரம்பரிய உடையமாகி தன்னகரில்லா கவி பாடிய ஒட்டக்கூத்தர்
வாழ்த்திய கைத்தறி என்றும் காலப்பெட்டகம்.