குழந்தையாய் துள்ளித் திரிந்த வள்
குமரியாய் கனவு கண்டவள் மருமகளாய் வரும் போது மகிழ்ச்சி மருட்சியுடன்
வருகிறாள்.
குடும்பத்தில் உள்ளவர் குணங்களை
குறுகிய நாளில் புரிந்து கொண்டு
அவர்களுக்கு தகுந்தாற் போல் அனுசரித்து செல்ல தயாராகிறாள்.
குடும்ப நன்மைக்காக ஆழமாக சிந்தித்து
குறைகளை நிறையாக்கி குதூகலப் படுத்துபவள்
இம்சை படுத்தினாலும் அவர்கள் இடத்தும்
இரக்கம் காட்டி இழுத்து போடுபவள்.
சலிக்காமல் உழைத்து சகசமாக இருப்பவள் சங்கடங்கள் தீர்க்கும் மூலிகையாய் இருப்பாள் மங்கல கரமாக எப்போதும் இருப்பாள்
குத்து விளக்காய் பிரகாசிப்பாள்.
கோபமாக பேசுவாள் குணமாக பேசுவாள்
குற்றம் சாற்றுவாள் குறைகளை சுட்டிக்காட்டுவாள் சுற்றத்தாருடன் நட்புடன் இருக்க செய்வாள்
உறுதியான மனம் படைத்தவள் சாதிக்கப் பிறந்தவள்.