சிறுசிறு மழைத்துளி சேர்ந்தால் அணைநீரையும்
சிறுக சிறுக சேமித்தால் வாழ்வுசிறக்கும்
எறும்பின் சேமிப்பு மழைக் காலத்திற்கு
மனிதனின் சேமிப்பு எதிர் காலத்திற்கு
வறுமை இல்லா வாழ்வு பெற
வாழ்க்கைக்கு அவசியம் சிக்கன சேமிப்பு
சிறுவயதில் இருந்தே பழக வேண்டும்
சிறுகச் சிறுக சேமிக்க வேண்டும் .
உண்டியலில் ஒவ்வொரு காசாய் போட்டு
பண்டிகை காலத்தில் கொடுப்பதை போட்டு
உண்டி சுருக்கி சேர்த்துவைத்து
உறவு வளர்க்க செலவு செய்து
வண்டி மாடு போல் பொதிசுமக்க
வாழும் காலம் அர்த்த மாகும் சண்டி மாடாய் குணம் இருந்தாலும்
சமாளிக்க உதவுவது சேர்த்த பணம்.
வயதில் சேமிக்க பழகிக் கொண்டால்
வறுமை வெளியே ஓடிப் போகும்
அயர்வு ஏற்படும் முதுமை நிலையில்
ஆதரவாய் இருக்கும் சேமிப்பு பணம்
உயர்வு கொடுக்கும் உழைப்பின் பயன்
உவகை கொண்டு வாழ வைக்கும்
துயரம் என்பது தூரம் போகும்
சேமிப்பு இருப்பாய் இருந்து விட்டால்.