சித்திரை மாத நிலவினிலே வான்
என்னை எழுதத் தூண்டியது நிலவு
புத்தியைத் தீட்டிப் பார்த்தபோது
விண்ணில் நட்சத்திரக் கூட்டம் மின்னியது
அத்தம் ஒளி கண்ட போது
முழு மதி தவழ்ந்து வந்தது முத்திரை பதித்த முழு ஒளியில்
மேகம் மறைத்து மறைத்து விளையாடி.
மீனாட்சி சுந்தரேசர் வைகை ஆற்றில்
கள்ளழகர் பச்சை பட்டு அணிந்து
வானவர் வெண்சங்கு ஊதி வந்து
அரியம் சிவனையும் கண்டு வணங்க
ஆனந்தனை மக்களும் காணும் கூட்டம்
வைகை ஆற்றில் வெள்ளமாய் பெருக
கானல் வெப்பமும் மனமும் கலந்து
பக்தி மனம் விண்ணைத் தொட….
சிவந்த சூரியன் மேகத்தில் மறைந்தான்
தன் வெப்பத்தை மறைத்துக் கொள்ள
குவலயம் குளிர்ச்சி கொடுக்க
நிலா
தன் முழுமையும் வெளியில் காட்ட
கைவளம் கூட கோளம் முழுமையும்
வெண்மை பரவிய நிலவு வெளிச்சம்
சவரி சிலிர்க்க மனம் மகிழ
மீனாட்சி கல்யாண சித்திரை திருவிழா