காடு மலை தாண்டி வந்த
மூலிகை தண்ணீர் பச்சிலை மண்மருந்து
பாடுபட்டு உழைத்து உண்டு உறங்கி
இயற்கையுடன் இணைந்து வாழும் போது
நாடு போற்றும் சித்த மருத்துவம்
அகமும் புறமும் சுத்தம் செய்து
கேடு வராமல் நோயி இல்லாமல்
வாழ்ந்தனர் பல ஆண்டுகள் சுகமாக.
இயற்கை உரம் பசுமையான காய்
பழம் வீட்டுத் தோட்ட உழைப்பில்
வியர்வை சிந்தி மன மகிழ்ச்சியில்
நோய் தூரப் போய் நிற்கும் பயறு வேகவைத்து கடலைக் கிழங்குகள்
இஞ்சி மல்லி சர்க்கரை பித்தநிவாரணி
இயல்பு நல்லதாய் அமைத்து வாழ்ந்தால்
இன்பத்துடன் இளமை மாறாது வாழலாம்.
மாங்காய் இலந்தப்பழம் மசக்கைக்கு நல்லது
இட்லி பொங்கல் சீரணத்துக்கு நல்லது தேங்காய் வாழை தேன் வெற்றிலை
வாதம் பித்தம் கபம் போக்கி வாங்கும் பொருள் ஆரோக்கியம் தர
சமைத்து உண்டு சுகாதாரம் பெறுவோம்
திங்கள் எண்ணெய் குளியல் சூடு தணிய
வில்வம் துளசி வேப்பிலை வலிமைக்கு.