வரவு அறிந்து செலவு செய்து
வகுத்து நல்ல திட்டம் தீட்டி மரம் போல் உதவ எண்ணி
மாநிலத்திற்கு பயன் சேர்க்க வேண்டும்
கரம் இருப்பது கொடுத்து மகிழ
காரணம் அறிந்து உதவி உயர்க
தரம் பார்க்காது தகுதிவளர்த்து
தரணியில் செழித்து வையத்தில் வாழ்.
நான்கு பங்காய் பிரித்தல் வேண்டும்
சாப்பிட கொடுக்க தேவை பிற்காலம்
வான்மழை பருவகாலம்பிரித்து
புவிவாழ திட்டமிட்டு கொடுக்கும் கொடை
தான் தனது பிறர் பிற்காலம்
பிரித்து செலவு செய்தால் உழைப்பு
மான்மகன் படைத்த படைப்பு பயன்
அறிந்து செலவு செய்தால் உயர்வு .
தேவை அறிந்து வாங்க
வேண்டும்
கண்டதை வாங்கி சிறமப் படாது
நாவை அடக்கி ஆளப் பழகினால்
ஆரோக்கிய வாழ்வு வசப்படுவது போல்
சேவை செய்யும் பழக்கம் வந்தால்
மகிழ்ச்சி நம் வசம் இருக்கும் ஔவை சொன்ன அமுத மொழியாய்
காலம் கடந்தும் வரலாறு ஆகும்.