தஞ்சாவூர் பொம்மை அசைந்து ஆடும்
தருவாய் இசைப் பாட்டு வளரும்
தர்க்கம் புலவரின் புலமை வெளிப்படும்
தலைமக்கள் ரசித்து இன்புற்ற தஞ்சையில்.
கவிஞர் எழுத்தாளர் ஆய்வாளர் கூடி
கருத்துக்கள் பரிமாறும் அட்சய பாத்திரம்
கற்கண்டாய் இனிக்கும் தமிழ் சுவை
கண்டு கேட்டு மகிழ்ந்து சுவைப்போம்.
ஓதுவார் ஓதவும் ஆடுவார் ஆடியதும்
ஓவியம் உயிர்பெற்ற சிற்பமாய் செதுக்கியதும்
ஓமக்குண்டம் வளர்த்த வேள்வி செய்து
ஓர்மை மனதுடன் ஆலயம் எழுப்பியதும்.
சோழர் காலத்து வரலாற்று நினைவுகள்
சோர்வில்லா உழைப்பின் ஆயிரம் ஆண்டுகள்
சோழ நாடு சோறுடைய
வளநாடு
சோதனை வென்று சாதித்த படைநாடு.
சரஸ்வதி மகால் நூலகம் பயன்பாடு
சரஸ்வதி கரங்களின் வீணை செய்தல்
சந்தன வாசனையாய் எங்கும் பரவும்
சத்துவ குணம் கொண்ட ராஜராஜன் புகழும்…
ஆயிரம் ஆண்டை தாண்டியும் அரசன்
ஆளுமை மெய் சிலிர்க்க வைக்கிறது
ஆக்கம் தரும் தஞ்சை கோயில் ஆட்சி செய்த பெருமை சொல்லும்.