உயர்ந்த உணர்ச்சி உரம் போன்றது
உயர்ந்த நோக்கம் விளளைச்சல் ஆகும்
உயரப் பறக்கும் பறவை போல உயரிய எண்ணமே உலகில் நிலைக்கும் .
கடலில் சிக்கிய படகாய் தவித்தாலும்
கரையில் விழுந்த மீனாய் துடித்தாலும்
நம்பிக்கை என்னும் மூச்சுக் காற்றில்
மதியால் வென்றால் சிலையாய் ஆவார்.
தகுதி குறைவால் தன்னலம் கருதுவர்
தப்பை உணர்ந்தால் தண்டனை குறையும்
தகுதி உடையவரை பாராட்டும் மனிதரை
தளிர் கூட பாராட்டி மகிழும்.
குறை உள்ளவர் நிறை கானார் இழிவாய் எண்ணும் மனம் உடையார்
பிழை செய்தாரை மன்னிக்க மாட்டார்
பழிவாங்கிய வீழ்ந்து போவார்.
தன்னை அறிய முயல வேண்டும்
தரணி உயர உழைக்க வேண்டும்
கடமை உணர்ந்து உயர வேண்டும்
தளர்வை கிள்ளி எறிய வேண்டும்.