இரு மனம் இணைவது திருமணம்
இது இல்லத்தின் பந்தம் திருமணம்
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
குடும்பம் நடத்தும் இல்ல அறம்
வரும்உறவை இன்முகத்துடன் உபசரித்து
மங்கல நாண் அணியும் திருமணம்
திருமதி அருந்ததி பார்க்கும் திருமணம்
அர்ச்சதை தூவிஆசி வழங்கும் திருமணம்
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
ஒரு மனமாகும் உறவு பந்தம் கங்கணம் கட்டி காலமெல்லாம் காப்பாற்ற
உறுதி எடுக்கும் மணப் பந்தம் பாங்குடனே பகுத்து குடும்பம் நடத்த
கொள்கை வகுத்து செயல்படும் பந்தம்
தாங்கும் தூண்போல் ஒருவரை ஒருவர்
தாங்கிப் பிடிக்கும் உணர்வு பந்தம்