தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழி
திருக்குறள் தந்த திருவள்ளுவரே வாழி உய்த்துக் கொடுத்த கொடையே வாழி
உயிர் வாழவழி காட்டியே வாழி
எய்யாமை போக்கும் ஏந்தலே வாழி
ஏட்டை தந்த தடாகமே வாழி
அய்யம் அகற்றும் ஈரடியே வாழி
அறம் வகுத்த அடியே வாழி
உலகப் பொது மறையாய் சுற்றிவந்தாய்
ஒரு இடத்தில் தங்கி விட்டாய்
உலகில் உயர்ந்த சிலையாக எழுந்து
கன்னியா குமரிக் கடலில் நிற்கின்றாய்
கலந்த சந்தன மனமாய் பரவி
காலம் பல கடந்தும் நிற்கிறாய்
வலம் வரும் வசந்தம் போல்
வாழ்வு செழிக்க வந்த குறளே!
சங்கத் தமிழ் நீ வளர்த்தாய்
கடல் சங்கமத்தில் அமைதி கண்டாய் பொங்கும் கடல் அலை கூட
தொட்டு தொட்டு சென்று ஓட
சங்கு கொண்டு ஊதிய தமிழ்
முக்கடல் கூடும் சங்கமத்தில் ஒலித்து பொங்கு தமிழ் பொழிவுடன் எழுந்து
முப்பால் புகட்டி புத்துயிர் பெற்றாள்.