தூய்மை உள்ள இடத்தில் லட்சுமி
பொறுமை உள்ள இடத்தில் சரஸ்வதி
முயற்சி உள்ள இடத்தில் பார்வதி
முப்பெரும் தேவியர் இடத்தில் வெற்றி.
வெற்றி தருவது நல்ல புத்தகம் வேதனை தருவது பழைய நினைவு
சாதனை தருவது வைராக்கிய புத்தி
சாதிக்க வைப்பது மனத்
துணிவு.
கடல் அலை ஓய்வது இல்லை காற்று வீச மறப்பது இல்லை நேரம் யாருக்கும் காத்து இருப்பதில்லை
மனிதன் மட்டும் சும்மா இருப்பதேன்.
இயற்கை எப்போதும் இயங்கும் சக்தி
சீற்றம் வந்தாலும் இயங்குவது இயற்கை
துயரில் மனிதன் ஒதுங்குவது ஏன்?
எதிர்த்து நில் வாழவழி கிடைக்கும்.
பணிவு இல்லையேல் பாதை கிடைக்காது
உண்மை இல்லையேல் உயர்வு கிடைக்காது
ஊக்கம் இல்லையேல் ஆக்கம் கிடைக்காது
துணிவு இல்லையேல் துடிப்பு இருக்காது.
மற்றவர் கருத்தை ஏற்க வேண்டும்
மாற்றுக் கருத்தை சொல்லவும் வேண்டும்
வெட்டிப் பேச்சே ஒதுக்க வேண்டும்
வாழ்வை வேள்வி ஆக்க வேண்டும்