சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டில் தூய தமிழ் எழுத்து
சங்கத் தமிழ் வளர்ந்த நாடு சங்கரி மீனாட்சி பிறந்த மதுரையில்
சகல கலைகளும் கற்று ஆண்டு
சங்கரன் கை பிடித்த மதுரையில்
இயல் இசை நாடகம் வளர்த்து
சங்கே முழங்கு என முழங்கும்
அன்னைத் தமிழ் வணங்கிப் பணிவோம்.
எண்ணத்தில் விளைச்சலே எழுத்தின் வடிவம்
ஏற்றமிக வாழ்விற்கு அதுவே ஆதாரம்
வண்ணத்தின் கலவைகளே காட்சி வடிவம்
காலத்தின் மாட்சிகள் ஆட்சி செய்யும்
திண்ணத்தின் திறவு கோலே செயல்பாடு
தீரத்தின் வெளிப்பாடே வெற்றி வகுக்கும் விண்ணதிர்வு மழை வரவின் வெளிப்பாடு
மண்ணில் உயிர் வளம் காக்கவே
புண்ணியம் செய்தவனே கடவுளாக உயர்கிறான்
புவிதனில் பிறந்து மக்கள் நலம்காக்க.
மரம் பல மண்ணில் வளர்ந்தாலும்
கருங்காலி தேக்கு சந்தனமே பயன்பாட்டில்
கரம் இரண்டு மனிதருக்கு இருந்தாலும்
கரம்கூப்பி வணங்கத் தகுந்தவர் குறிப்பேட்டில்
தரம் இல்லா எழுத்து எல்லாம்
தண்ணீரில் எழுதியது போல் கரைந்து
உரம் போன்று ஆக்கம் தரும்
எழுத்து மனதை தட்டி எழுப்பும்
வரம் போல வாழ்வு சிறக்க
வரும் எழுத்து எழுத்தாக நிலைக்கும்.