பத்து விரலின் கூட்டு முயற்சி பளு தூக்கும் முயற்சியில் வெற்றி!
ஒருவர் விதைத்த விதை நெல் பலரில் உழைப்பால் அறுவடை நெல்லாய் !
ஆசிரியர் ஒருவர் கற்றுத் தருவதால்
பலர் வாழ்வில் ஒளிச் சுடர்!
கரிக்கும் நீராய் கடல் ஒன்று அடிக்கும் தொடராய் அலைகள் பல !
பற்றும் நெருப்பு மிளகு அளவு பரவும் வேகம் புயல் வேகம்!
பஞ்சின் நூல் பல வண்ணம் நெய்து உடுத்துவது பலர் தானே !
மதங்கள் பல இருந்து வந்தாலும்
பிறப்பு என்பது கருவறை தானே !
மரங்கள் பல சேர்ந்தால் தானே மழை என்பதை பெற முடியும்!
கஷ்டம் என்பதே பல கடந்தால் கடைசியில் வருவது நிறைவு தானே !
உழைப்பவன் பலர் சேர்ந்தால் தானே
உற்பத்தி திறனை உயர்த்த முடியும் !
ஒன்றாய் சேர்ந்த மக்களால் தானே
சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் !
ஒவ்வொரு வீடும் ஒன்று பட்டால்
இந்தியன் வாழ்வில் ஒற்றுமை ஓங்கும் !
ஒன்று பட்டு வணங்கு நாம் தேசியக் கொடியை ஏற்றி மகிழ்வோம்.
வந்தே மாதரம்!