காவேரி நடந்து வந்தால் சோலை
பாய்ந்து வந்தால் பசுமை புரட்சி
நாடித் துடிப்பாய் பாயும் போது
நாடு செழிக்கும் நன்மை பெருகும்
ஓடும் தண்ணீரில் ஓடையில் குளிர்ந்து
பாயும் தண்ணீரில் பயிர்கள் வளரும்
காடும் கலமும் நிறையும் களஞ்சியது
தானியம் ஆண்டுக்கு வந்து வரவாகும்.
ஓடிவரும் பாதை எங்கும் பசுமை
செடியும் கொடியும் மரமும் மகசூழும்
பாடிவரும் பறவை உண்டு உறவாடி
மரத்தில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கும்
நாடிவரும் வண்டின் ரிங்கார சங்கீதம்
மரகத சேர்க்கை செய்து மகிழும்
வாடி விடாமல் விவசாயி பார்த்து
நீர் பாய்ச்சி அறுவடை செய்வர்
கோடி நன்மை கிடைக்கும்
நீர்வரத்தால்
இயற்கை உலகுக்குக் கொடுத்த வரம்
நாடி வரும் விவசாயி
நலமுற்றால்
நானில்லமே சிறக்கும் உணவு வரத்தால்….
மூடி போட்டு அடைத்து வைக்க
தானியம் அல்ல! தண்ணீர் தேங்காமல்
பாடி ஓடிப் பாய்ந்து தமிழ்
மண்ணில் நடந்தாய் வாழி காவேரி.