இந்தியாவின் சுவாசக் காற்று சுதந்திரம்
சுதந்திர மூச்சுக் காற்றில் கல்வி
மந்தையுடன் மாடு மேய்த்த சிறுவர்கள்
மதிய உணவுடன் கல்வியும் பெற்றனர்
சிந்தையில் அறிவு மிகுந்த மாணவர்கள்
சிகரம் தொடும் சாதனை மக்கள்
முந்தைய வரலாற்றை கணினியில் ஏற்றி
முகவரி பதிக்கும் பாமர மக்கள்
நிந்தை பொறுத்து நினைவு நல்லதாகி
நிமிர்ந்து பணி செய்யும் பாமரர்கள்.
எல்லோரும் ஒரு குல மக்களாய்
உறவு கொண்டு உரிமை பெற்று
நல்லோர் கூறும் நல்லறிவு சிந்தனையை
நயமுடன் ஏற்று செயலது செய்து
வல்லோர் ஆகி அருஞ் செயலில்
வளமைப் படுத்தும் பாமர மக்கள்
கல்லார் இல்லா நாடு ஆக்க
களம் இறங்கிய பாமர மக்கள்
பல்லோர் போற்றும் பொது உடமையில்
சுகம் காண்பது சுதந்திர நாட்டில்.