பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
வருந்தி உழைத்த உழைப்பு பணம்
வருவதில் நிதிநிலை அறிவது திரம்
கருத்து ஒன்றி கணக்குப் பார்த்து
வகுத்துப் பிரித்து செலவு செய்து
திருப்பணிக்கு ஒரு தொகை ஒதுக்கி
முதுமை அற வாழ்விற்கு ஒதுக்கி….
உண்ணும் உணவை அமிர்தாய் நினைத்து
உலக வாழ்வில் சிரத்தைக் கொண்டு
மண்ணில் வாழும்கால நிலைக்கு ஏற்ப
கணக்குப் பார்த்து செலவு செய்து
கண்ணாய் கருத்தாய் திட்டம் தீட்டி
திரவியம் சிறிது சேமிப்பில் ஒதுக்கி
கண்ணியமாக வாழும் வாழ்க்கை கண்டு
கடவுள் கூட ஆசி தருவார்.
அரசு தீட்டும் திட்டம் நாட்டிற்கு
கணவன் மனைவி திட்டம் வீட்டிற்கு
வரவை மிஞ்சி செலவு செய்தால்
கடன் பட்டு துன்பக் கடலில் அரசு திட்டத்தை மக்கள் கடைபிடித்தால்
நாடும் வீடும் சொர்க்க மாகும்
வரவு அறிந்து செலவு செய்தால்
வாழும் காலம் வசந்தம் ஆகும்.