சங்க கால இலக்கண நூல் அகத்தியம்
தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம்
அங்கம் மகிழ பத்துப்பாட்டு எட்டுத்தொகை
அகநூல் குறிஞ்சி முல்லைப்பாட்டு பட்டினப்பாலை
பங்கமில்லா புறநூல் நெடுநல்வாடை மதுரைக்காஞ்சி
ஆற்றுப்படை ஐந்தும் பூத்த மலர்கள்
சிங்கார குறள் தொடர்ந்து படித்தால்
சிந்தனை ஊற்றாய் தொடர்ந்து ஊரும்.
தமிழ்த்தாய் மேனியில் சிலப்பதிகாரம் மணிமேகலை
சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி
உமி தானியத்தை காப்பது போல்
தாய் அணிந்து காப்பியத்தை காக்கிறாள் கமித்தல் தமிழனின் பண்பாட்டு குணம்
காரியத்தில் துணிந்து செய்யும் உழைப்பு
தமிழை மயிர்சிலிர்க்க ஒலிக்கச் செய்வான்
தரணி புகழ் பரவச் செய்வான்.
சம்பந்த நாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர்
திருமுறை தந்த இறை பக்தர்கள்
நம்மாழ்வார் பேயாழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் கேசவனை பாடி தமிழையும் ஆண்டாள்
கம்பர் எழுதிய கவிநய ராமாயணம்
வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடிய மகாபாரதம்
தம்பம் போல் காக்கும் கவசமாய்
முருகனும் நெஞ்சில் பூத்த மலர்கள்.