பந்து போன்ற உலக உருண்டை பறந்து போவது முடியும் ஒன்றா பாசம் வைத்து உலக மக்கள் நேசம் கொண்டால் முடியும் தானே!
நாணயத்தின் இரு பக்கம் போன்று
நாளும் மாறும் இரவு பகல் தேசம் விட்டு தேசம் போனால் இணைய வைப்பது நாட்டுப் பண்பு.
காசு பணம் தேடித் தானே
காத தூரம் பயணம் செய்கிறர் உறவு பிரிந்து உள்ளம் நெகிழ்ந்து
தேசம் பிரிந்து போன போதும்.
நாடு விட்டு வந்த மக்கள்
பாடு பட்டு உழைக்கும் போது நேசம் கொண்டு உறவு கொண்டு
பாசம் கொள்வது நட்புக் கூட்டணி
சாதி இல்லை மொழி இல்லை சமத்துவ மொழி இந்திய மொழி
இந்தியன் என்ற உணர்வு மொழி
அன்னியப் படாமல் காக்கும் மொழி.
உறவுப் பாலமாய் இணைக்கும் கரங்கள்
உதவும் நேசம் உள்ளப் பாசம் நாடு விட்டு நாடு போனாலும் நாளும் வளர்வது நாட்டு நேசம்