பாலை வனத்திலும் சோலைகள் இருக்கும்
வறுமைக் குப்பின் வளம் இருக்கும்
காலை முதல் உழைப்பு இருந்தால்
கல்லில் கூட புல் முளைக்கும்
தாலம்பூ வெப்ப பூமியில் வளரும்
தன்னை மக்களுக்கு கொடுத்து உதவும்
ஆலம் கூட வெப்பம் தாங்கும்
அன்னை பூமிக்கு நிழல் தரும்.
மரக்காடு பூமி! தமிழர் கடைக்கோடி
இராமநாத புரம் மாவட்ட மாகும்
மரங்கள் கருவேலம் அதிகம் உண்டு
தண்ணீர் பற்றாக் குறை உண்டு
இரவு பகல் உழைக்க விரும்பி
விடா முயற்சி செய்து உழைத்து
வரமாய் மாறும் வறண்ட பூமி சோலையாய் மாறும் கனிதரும் மரங்கள்.
பஞ்சாப் விவசாயி உருவாக்கிய பலத்தோட்டம்
பஞ்சம் விரட்டும் வெற்றி வழி
தஞ்சம் புகுந்து மண்ணிடம் உழைத்தால்
தரமான கனிகள் விளைச்சல் ஆகும்
நெஞ்சம் நிறைவாய் நிம்மதி கிடைக்கும்
பசுமை புரட்சி வரமாய் மலரும்
கொஞ்சம் மனம் வைத்தால் போதும்
கையை ஏந்தும் நிலை மாறும்.