படிப் படியாய் உயர்த்துவது ஏணி
வகுப்பு வகுப்பாய் உயர்த்துவது கல்வி
கடிதல் கொண்டு ஆசிரியர் தண்டித்தாலும்
மாணவரை உயர்த்தும் உயர்ந்த எண்ணத்தால்
விடிதல் கொடுக்கும் விடிவெள்ளி கல்வி
ஒளி விளக்காய் சுடர்வது கல்வி
கொடி பூவாய் மணம் வீசுவது
அறிவு என்ற மூன்று எழுத்தால்
கல்வி கடல் போல் நீண்டது
கல்லூரி படிப்பு முடிந்தும் தொடரும்
நல்லதை செய்ய தூண்டும் தூண்டுகோல்
அல்லவை விளக்கச் செய்யும் காரணி
வல்லவனாய் வையத்தில் உயர வைக்கும்
வாக்கு. வாதம் தவிர்க்க செய்யும்
வெல்லும் ஆற்றல் தருவது கல்வி
மூர்க்க குணம் விலகிச் செல்லும்
சாதி மத பேதம் இல்லாமல்
அனைவரையும் சாதிக்க வைப்பது கல்வி
போதி மர புத்தர் போல்
போதனை தருவது படித்த கல்வி
ஓதி உணர்ந்து செயல் பட்டால்
ஓய்வு அறியாமல் இயங்க வைக்கும்
மதி அறிவால் வெல்லும் இடத்தில்
மதிப்புடன் வாழ வைப்பது படிப்பு.