இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கு பொருத்தி
இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது
இன்றைய பொது நலத் தொண்டு.
இரத்தம் இல்லாமல் இறந்தவர் ஒருகாலம்
இருப்பவர் கொடுத்த சேமிப்பு வங்கி
உடனே ஓடிவந்து உதவ வரும் இளைஞர் உறவினர் விழிப்புணர்வு வெளிப்பாடு.
கிட்னி முதல் இதயம் வரை மாற்று உறுப்புகள் மாற்றும் மருத்துவம்
மூளைச் சாவு அடைந்த விபத்தினரை
தானம் செய்ய முன்வரும் பெற்றோர்.
முதியோர் இல்லம் வருத்தம் தந்தாலும்
பேணிக் காப்பது பொது நலம் பிறந்த குழந்தையை தூக்கி எறிந்தாலும்
எடுத்து வளர்ப்பது பொது நலம்.
தொழு நோயாளிக்கு மருத்துவம் செய்த
அன்னை தெரேசா அன்பின் வடிவம்
ஆதரவு கரம் கருணை இல்லம் வாடிய பயிரை கண்டுவாடிய வள்ளலார்
நாட்டைக் காக்க பனிமலையில் காவல்புரியும்
ராணுவ வீரர்கள் அவர்கள் குடும்பத்தினர்
பொதுநலத் தொண்டின் தியாகிகள்
ஒவ்வொரு சுதந்திரப் போராட்டத்தின் பின்பும்…
இந்திய ரத்தமும் சதையும் சாட்சியாய்
சிதறிய மக்கள் பல்வேறு திசையில்
பிரிந்து போனாலும் மனித ஒருமைப்பாட்டில்
பொது நலம் மனதின் வளம்.