மதுக்கடை பக்கம் போகாதே!
மானம் பறந்து போய்விடும்
மதியும் தான் கெட்டிடும் மனசும் தான் கெட்டிடும்
மதுக் கடை பக்கம் போகாதே!
மானம் பறந்து போய்விடும்.
குடும்பச் சண்டை வந்திடும்
குடிப்பதால் குதூகலம் போய்விடும்
குழந்தை மனம் கெட்டுவிடும்
குழந்தை வருந்தி வாடி விடும்
மதுக்கடை பக்கம் போகாதே!
மானம் பறந்து போய்விடும்.
மூளையும் தான் பாதிக்கும்
குடலும் அழுகிவிடும்
கைகால் நடுக்கம் வரும் மது குடிக்கும் பழக்கத்தாலே!
மதுக்கடை பக்கம் போகாதே!
மானம் பறந்து போய்விடும்.
சம்பாதிக்கும் பணத்தை எல்லாம்
சாராயக் கடையில் கொடுக்காதே!
சாமியை சரண் அடைந்தாலும்
சங்கடம் போய்விடும்.
மதுக்கடை பக்கம் போகாதே!
மானம் பறந்து போய்விடும்.
சாதிக்க பிறந்த நீ! சாக்கடையில் கலந்த பால் போல்
வாழ்க்கையை இழந்து விடாதே!
மதிப்பில்லா உயிரை காத்து விடு.
மதுக்கடை பக்கம் போகாதே!
மானம் பறந்து போய்விடும்
அன்புடன்
டாக்டர் செந்தமிழ் வாணி ச. மல்லிகா
10.11.2024.