சோதனை பல தாங்கி போராடி
சேவகம் மக்களுக்கு என்று எண்ணி
வேதனை சூழ்ந்த போதும் சுழன்று
வெல்வது உறுதி! காப்பது அமைதியென
போதனை செய்து அகிம்சை வழியில்
போராடி சிறை சென்று வாடி
சாதனை படைத்த சரித்திர காந்தியே
சாதித்தது சாந்தமே உண்மை வழியே!
போர்பந்தர் ஊரில் பிறந்ததால் தானோ!
போர் செய்த எதிரியை வென்றீர்
தார் போடாத சாலை எல்லாம்
நடந்தே சென்ற நடைபயணம் எல்லாம்
வேர்போல் ஆழமாய் வேரூன்றியதால்
இரத்தம் சிந்தி உயிர் தியாகம்
கார்மேக கண்ணீர்! சுதந்திர தாகம்
அணலாய் எரிந்த வேள்வி சிறை!
துப்பாக்கி குண்டு பீரங்கி குண்டு
தூரப் போனது அகிம்சை குண்டால்
உப்பு சத்தியா கிரகம் செய்து
அன்னியப் பொருள் எரித்து எதிர்த்து
சட்டப் படிப்பு படித்த காந்தி
சகல வேலையும் தானே செய்தார்
சட்டை போடாத எளிய காந்தி மாணிக்கமாய் ஒளிந்த மனிதர் காந்தி.