அகரத்தில் அமைந்த அமெரிக்க நாட்டில்
மினசோட்டா தமிழ் சங்கம் அமைத்து
சிகரம் தாண்டி வந்த தமிழர்கள்
சிறப்புடன் செயல்பட தமிழ் பள்ளி
நிகழ்வுகள் தொடங்கிய இன் நன்னாள்
போற்றுதலுக்கு உரிய பொன்னாள் தமிழ்
பகடுபெற்று பரவசம் கொள்ளும் நாள்
பார்புகழ தமிழ்பள்ளி வளரும் நாள்.
சங்கம்வைத்து தமிழ் வளர்த்தவன் தமிழன்
சகோதர உணர்வு கொண்டவன் தமிழன்
சிங்கம் போன்ற சிறப்புடையவன் தமிழன்
சிகரம் தாண்டி திரவியம் தேடி
சங்கு ஊதி முழக்கம் இட்டு அமுது போன்ற தமிழ் சுவைபருகி
வங்கம் தாண்டி தமிழ் பரப்பி
வசந்த காற்றே சுவாசிப்பவன் தமிழன்.
உறவு பிரிந்து உள்ளம் நெகிழ்ந்து
உறவு கொண்டு சங்கம் வைத்து
குறள் பரப்பி நெறி வளர்த்து
சகோதர சகோதரியாய் ஒன்று கூடி
அறம் வளர்த்து திருப்பணி செய்து
அன்பு கொண்டு உபசரிப்பவன் தமிழன்
சிறப்பு பெற்ற தமிழர்கள் இணைந்து
சீர்மிகு செயலாற்றும் இன்னால் பொன்னாள்.
தாய்க் குலத்தை மதிக்கும் சகோதரர்கள்
வாழ்க்கை நெறி அந்தாதியை வெளியிட
சேய் போல் கொண்டுவந்த
எனக்கு
நூல் வெளியிட்டு பெருமை சேர்த்தீர்
வாய்புகழ வார்த்தைகள் கோடி கொண்டு
நாவார வாழ்த்துகிறேன் வாழ்க! வாழ்க!
தாய்போல் அரவணைத்து தமிழ் வளர்க்கும்
மினசோடா தமிழ்ச்சங்கம் வாழ்க வளர்க.