மீனாட்சி
மதுரை வீதியில் மீனாட்சி! மங்களமாய் அவள் வந்திடுவாள் !
தோளில் கிளியுடன் மீனாட்சி !
தேரோடும் வீதியில் வந்திடுவாள் ! (மதுரை)
கருணை மழையே மீனாட்சி! காண்போர்க்கு காட்சி தந்திடுவாள்!
சொக்கன் மனைவிமீனாட்சி! சொர்க்க மார்க்கம் காட்டிடுவாள்? ( மதுரை)
சங்கத் தமிழே மீனாட்சி! சங்கரனுடன் காட்சி தந்திடுவாள்!
பிறவி மருந்தே மீனாட்சி! பிறவாமை வரம் தந்திடுவாள்! (மதுரை)
பாண்டியன் மகளே மீனாட்சி !
பார் புகழச் செய்திடுவாள்! புது நீரில் ஆடும் மீனாட்சி! புதுமைகள் செய்ய புறப்படுவாள் ! (மதுரை)
மூங்கில் உருளையில் மீனாட்சி !
ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடுவாள்!
ஆணவம் அழிக்கும் மீனாட்சி !
அடியவர் மனதில் தங்கிடுவாள். (மதுரை)