மாய உலகில்
மயக்கம் நீக்கி
மனதில் அமைதி
தவமாய் மாற…
தவத்தில் ஆற்றல்
மண்ணில் படர்ந்து தன்னலமற்ற அன்பாய் மலர்ந்துமணக்கும்.
குதிரைக்கு முகத்திரை போடுவது போல
மனதிற்கு கடிவாளம்
போட்டுத் தடுத்து.
தனக்காக வாழ்வதை
தவிர்த்து விலகி
பிறருக்காக வாழ
சக்தி தோன்றும்.