சிரித்துப் பேசுங்கள் கோபத்தை தள்ளுங்கள்
முழு மனிதனாய் முகவரி பதியுங்கள்
பரிதி போல் ஒளி வீசுங்கள்
உயர்வை உங்கள் வசம் ஆக்குங்கள்
மூரி கொண்டு விளை யாடுங்கள்
முழு ஆரோக்கியம் பெற்று வாழுங்கள்
பரிவு கொண்டு புத்தகம் படியுங்கள்
பண்பை வளர்க்கும் மந்திரம் ஆக்குங்கள்.
விரிவு படுத்த நிறை காணுங்கள்
நட்பு விரிந்து உயர்வு கொள்ளுங்கள்
புரியும் படி சொல்லிக் கொடுங்கள்
வளம் நலம் பலம் பெறுங்கள்
தரிசனம் கண்டு உள்ளம் மகிழுங்கள்
இறை அருள் பெற்று வாழுங்கள்
திரிசூலம் நம்மை காக்கும் வேலிகள்
திருவடி போற்றி சாதனை புரியுங்கள்.
இனிமையுடன் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்
மக்கள் மனதில் நிலைத்து இருங்கள்
கனிவாக செயல் செய்யப் பழகுங்கள்
உயர்வு வந்தும் பணிவாகச் செய்யுங்கள்
தனிமையில் இருந்து செயல்பட பழகுங்கள்
கால விரயம் தவிர்க்க உதவுங்கள்
பனி நீர் குளிர்ச்சியாய் இருங்கள்
தாமரை இலை தண்ணீராய் இருங்கள்.