இயற்கையின் அற்புத படைப்பு இறைவன்
இயக்கும் இயக்கம் புரியும் போது
இன்பம் இதய வாசலைத் தொடும்
இணைந்தே மனம் ஊஞ்சல் ஆடும்.
பனித் துளி பார்க்கும் போது பரவசப் பட்டு மனம் மகிழும் பனி மழை பார்க்கும் போது பரமன் உருவம் செய்தே மகிழும்.
இலை உதிர்ந்து பட்ட மரமாய் இருக்கும் மரங்கள் மனித எலும்புக்கூடு
பனி பார்த்த மரங்கள் எல்லாம் பனி உடை அணிந்து மகிழும்.
இரத்த நாளங்கள் பரவி சதைகள்
இணைந்து சதை பற்று பிடித்து வெற்று உடம்பில் பல வண்ண ஆடை உடுத்தி அழகு கூடும்.
மழை கண்ட மரங்கள் எல்லாம் தண்ணீர் உறிஞ்சி இலை துளிர்க்கும்
வண்ண பூவாடை தரித்து மகிழும்
வரிசையாக அணிவகுத்து அழகு காட்டும்.
கோடை வெயில் பட்ட மரங்கள் கோயிலைக் கண்டு தரிசனம் பார்க்கும்
தலைநிமிர்ந்து தலையாட்டி குளிர் காயும்
முக்கால கொடை இயற்கை அமெரிக்கா.