உன்னால் முடியும் என்று நினைத்துவிடு
உண்மைப் பொருளை எடுத்துச் செல்லு
உலகம் உன்னை பழித்தாலும் துணிந்து
உரமாய் போட்டு எடுத்துச் செல்லு .
உழைப்பு உன்னுடன் இருந்து விட்டால்
உயர்வை யாரும் தடுக்க மாட்டார்
உறுதி உன்னுடன் இருந்து விட்டால்
ஊனம் கூட தடை இல்லை.
சிறிய செயலை எடுத்துக் கொள்
சிரத்தை உடனே செய்து முடி பெரிய பெரிய செயல் செய்ய பெரிதும் துணையாய் நின்று விடும்.
கடுகு என்று யாரையும் ஒதுக்காதே
கடுமைச் சொல் பேசி கொள்ளாதே
சிறுமை என்று செயலை தள்ளாதே
சிதைவு கண்டு மனம் தளராதே.
ஊக்கம் உன்னை உயர்த்தி விடும்
ஆக்கம் கொண்டு உழைத்து விடு
தாக்கம் என்பது தள்ளிப் போகும்
தேக்கம் என்பது தேய்ந்து போகும்.
முடியும்.. முடியும்… முடியும் என்றால்
முனைப்பு உன்னிடம் வந்து விடும்
மலையும் நகர்த்தும் துணிவு வரும்
மலைக்க வேண்டாம் செயல் படு.