அகவை முதிர்ந்த அனுபவம் முதிர்வு
புன்னகையுடன் அனுசரிக்கும் அன்பு முதிர்வு மகன் மகள் படிப்பு முடித்து
தொழில் திருமணம் பேரன் பேத்தி
அகம் மகிழ்ந்து வாழும் முதிர்வு
அக்கம் பக்கம் நேசம் வளர்த்து
அகத்தடிமை பட்டு இறை தொண்டாற்றி
உவகை கொண்டு வாழும் முதிர்வு.
வாழ்ந்து அனுபவித்த பாடப் புத்தகம்
நான்கு ஐந்து தலைமுறை கண்டு
வீழ்தல் அகற்றி வீருகொண்டு எழுதல்
கற்பிக்கும் அனுபவ கல்வி அறிவு
மாழ்குதல் இன்றி செயல் படும்
நெம்பு கோல் தூண்டும் மணிவிளக்கு
சூழ் விளக்க ஆய்வு அறிவு
பெற்ற பெட்டக களஞ்சியம் முதிர்வு.
விருப்பு வெறுப்பு களைஅகற்றி
இன்பம் துன்பம் கடந்து வந்து திருப்பம் பல கண்டு வாழ்ந்து
திசைகள் எட்டும் சுழன்று இயங்கி
இரும்பு போல் அடி வாங்கி
பக்குவப் பட்டு பகுத்து உணர்ந்து
கரும்பு அடிப் பகுதி ஆகி
பிறர் வாழ வழிகாட்டும் முதுமை.