முப்பாட்டனுக்கு பாட்டன் திருவள்ளுவர் திருக்குறள்
வாழ்வியல் நெறிப்படி வாழ்தல் இனிது
முப்பாட்டி ஔவையார் வகுத்து தந்த
அமுத மொழிப்படி வாழ்தல் இனிது
எப்போதும் என்னாலும் வாழ்வின் அர்த்தம்
ஆய்ந்து வாழ்ந்த மூதாதை அனுபவம்
எப்போதும் என்னாலும் ஏற்று நடந்தால்
வாழ்வும் நாடும் வளமே காணும்.
தாத்தா பாட்டி அனுப்பவப் பாடம்.
கேட்டு வளர்வது செவிவழி பாடம்
சத்தைப் போட்டு வளரும் மரம்
நற்கனி கொடுப்பது போல் நல்….
முத்தாய் விளையும் மழைத் துளி
பயன் தருவது போல் நம் மூத்தோர் சொல் ஊட்டச் சத்தாய்
உரமாய் இருந்து நற்பலன் தரும்.
கருவில் சுமந்து அன்பில் அரவணைத்து
தாய் மொழி கற்பிக்கும் அன்னை
இருவினைப் பயனும் எடுத்துச் சொல்லும்
அன்னை தந்தை வழிநடத்தல் இனிது
குருவாக கற்பிக்கும் ஆசிரியர் சொல்
உருவ சாத்திரம் கற்கும் சொல்
திருவுளம் கொண்டு ஏற்று நடந்தால்
வீடும் நாடும் போற்ற வாழலாம்.