உறுப்புக்கள் உறுதியாக ஆசனப் பயிற்சி
மனதை இணைத்துக் கட்டுவது யோகாம்
குறுகிய காலத்தில் பெண்கள் செய்ய
நாடிசுத்தி சர்வாங்க சாந்தி மத்யாசனம்
சிறுவர் சிறுமியர் செய்யும் ஆசனம்
பத்மாசனம் புஜங்காசனம் முத்ராதனு சக்கராசனம் வெறும் வயிற்றில் ஆசனம் செய்ய
காலை மாலை செய்வது பயிற்சி .
இறை வழிபாடும் ஒரு யோகம்
முறையாய் கடை பிடிப்பது வலிமை
அறையில் இருக்கும் சாமி படமும்
கோயிலில் இருக்கும் சாமி சிலையும்
பொறை தரும் மன அடக்கத்தால்
பூமித் தாய் போன்ற பொறுமை
முறையாய் காலை மாலை பயிற்சி
உறைதல் ஒழுகுதல் ஒரு யோகம்.
காலையில் எழுந்து படிப்பதும் பயிற்சி
மாலையில் விளையாட்டும் ஒரு பயிற்சி
மலை ஏறுவதும் ஒரு பயிற்சி
களை எடுப்பதும் ஒரு பயிற்சி கலை ஓவியமும் ஒரு பயிற்சி
விவசாயம் செய்வதும் ஒரு பயிற்சி
சிலை செய்வதும் ஒரு பயிற்சி
வாழ்க்கை நெறி யோகப் பயிற்சி.