வரும் மானம் காப்பது வருமானம்
தரம் உயர்த்தி வாழவழி வகுப்பது
திரும்பத் திரும்ப உழைக்க வைப்பது
திருமகள் மகிழ வருவது வருமானம்
வருமானம் வந்தால் தான் திருமணம்
திருமண வாழ்வு சிறக்க வைப்பது
வருமானம் தருவது ஆளுமை திரன்
வறுமை போகச் செய்வதும் வருமானம்.
சிறு தொழில் பெரிய வணிகம்
கைத்தொழில் படித்து பல பணி
குறுஞ் செய்தி பிரிவு கணினி
பத்திரிக்கை வானொலி தொலைக் காட்சி
சிறு வயல் குளம் கட்டிடம்
செருப்பு தையல் முடி திருத்தம்
பீறுதல் மரம் பிளந்து செய்யும்
கதவு சன்னல் சிலை கலைப்பொருள்.
எண்ணில் அடங்கா வேலை செய்வது
எண்ணிய படி வருவாய் ஈட்டவே
திண்ணமாய் திடமாய் இருக்க வைப்பது
திரவியம் சேர்த்து அறம் செய்ய
எண்ணம் நிறைவேற்ற ஈடில்லா சேவை
எளிதாய் தர்மம் செய்ய உதவுவது
கண்ணியம் காக்க வைப்பது கடமை
காரியம் ஆற்ற உதவுவது வருமானம்.