யானை போல் வலிமையும் மானைப் போல் நற்பண்பும் எறும்பு போல் சுறுசுறுப்பும் காகம் போல் பகிர்ந்துண்டும் வாழ்வது இனிது.
சிங்கம் போல் கம்பீரமும்
புலி போல் விரைவும்
தேக்குப் போல் உறுதியும்
தேன் போல் இனிமையுடன் வாழ்வது இனிது.
குயில் போல் கூவி
மயில் போல் ஆடி
மந்திபோல் தாவாமல்
நாய் போல் நன்றியுடன் வாழ்வது இனிது.
ஆல் போல் நிலைத்து
அகில் போல் மணம்வீசி
வேம்பு போல் வேரூன்றி வாழை போல் பயனுற்று வாழ்வது இனிது.
தங்கம் போல் மதிப்புடன் வெள்ளி போல் கருக்காமல் முத்து போல் தூய்மையுடன் வைரம் போல் ஒளிவீசி வாழ்வது இனிது.