அம்மா என்று அழைத்த போது
அன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள்
சும்மா ஒருநாளும் இருந்தது இல்லை
சுமை தாங்கும் கல்லாய் இருப்பாள்
இம்மை பிறப்பு இயங்க வைப்பாள்
இன்னல் தாங்கி மேன்மை தருவாள்
தம்மை தரணியில் தாழ்த்திக் கொண்டு
பிறர் உயர ஏணியாய் இருப்பாள்.
சிவகங்கை சீமையிலே வேலு நாச்சியார்
சுதந்திர நாட்டிற்காக சிலிர்த்து எழுந்தவர்
சிவமுக்தி தவகாசியில் ஜான்சி ராணியெனும்
வீரமங்கை மணி கர்னிகா பிறந்தால்
தவப்புதல்வன் இறந்த பின்பு தத்துபிள்ளை
நாடாள வேண்டி ஆண் வேடமிட்டு
சவமாகும் வரை போரிட்ட வீரமங்கை
சவத்தை எரிக்கும் பெண் வைரமணி.
கவிபாட கல்யாணம் துறந்த ஔவை
கள்வன் அல்லவென போராடிய கண்ணகி
கவிபாடி புனைந்த மங்கை பாஞ்சாலி
இசைபாடி புகழ்பெற்ற மங்கை சுப்புலட்சுமி
புவியில் ரேடியம் கண்டுபிடித்த மேரிகியூரி
விளையாடி தங்கம் வென்ற மல்லேஸ்வரி
புவிபுகழும் விண்வெளி கல்பனா சாவ்லா
ஒருவழி செவ்வாய் செல்லும் சாரதா.
வீரமங்கை விளைஞ்ச நம் நாடு
வீறு நடை போடும் நாடு
தீர மங்கை ஔவை கொண்டு
தீர்வு கண்ட நாடு நம்நாடு சீரம் கொண்டு பாடுபடும் உழவனுக்கு
பக்க பலமாய் இருப்பவள் பெண்
நீரகம் சூழ்ந்த இப்புவியில் பெண்கள்
இல்லாமல் ஏது சக்தி
இப்புவியில்.