படிக்காமல் வேலைசெய்து உயர் பவனுண்டு
படித்த படிப்புக்கு வேலைதேடி அலைபவனுண்டு
குடிஉயர கொள்கையுடன் வேலை செய்பவனுண்டு
குடித்துவிட்டு வம்பு பேசி வீதியில் விழுபவனுண்டு
தடிபிடித்து சமூக நெறிமுறை காப்பவனுண்டு
தடியால் அடிவாங்கி சிறையில் அடைபட்டவனுண்டு மடிக்கணினி பயன்படுத்தி உயர்பவனுண்டு
மல்லுக்கட்டி மண்டை உடைத்துக் கொள்பவனுண்டு.
கடைக் வைத்துப் பிழைப்பவன் உண்டு
கண்ணியம் மறந்து சுற்றுப்பவன் உண்டு
வடை விற்று வாழ்பவன் உண்டு
சோம்பி முடங்கி கிடப்பவன் உண்டு
தடை தாண்டி பிழைப்பவன் உண்டு
தடிமாடாய் தண்டச்சோறு தின்பவன் உண்டு
குடைவிற்று செருப்பு தைப்பவன் உண்டு
கடன்பட்டு உயிரை மாய்பவன் உண்டு.
கல்சுமந்து மண்சுமந்து வாழ்பவர் உண்டு
கடினமான வேலையென தட்டிக்கழிப்பவன் உண்டு
நல்லகருத்து ஏற்றுசிலை வடிப்பவர் உண்டு
எதிர்த்து ஏளனம் செய்யும் எத்தருமுண்டு
சொல்நயத்துடன் பேசி உயர்பவர் உண்டு
மரவேலை சாமான் செய்பவர் உண்டு
இல்லையென்று சொல்லாது செய்பவர் உண்டு
இருப்பதைக் கொடுக்க
மனமில்லா மனிதருண்டு.