10-ஒப்புரவு வொழுகு
கலா கேட்டாள். பாட்டி இந்த பண்டிகையினால் என்ன பலன் என்று….
ஆண்டு முழுமைக்கும் இறைவனை வழிபடவும் மனம் ஒருநிலைப்படுத்தவும் நமது முன்னோர்கள் செய்த ஏற்பாடு பண்டிகைகள்…
அதைச் சொல்லுங்கள் பாட்டு என்றால் கலா
பாட்டியும் சொல்ல ஆரம்பித்தார்கள்…
சித்திரையில் தமிழ் வருடப்பிறப்பு,
வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு, ஆனி திருமஞ்சனம் சிவபெருமானுக்கு, ஆடியில் அம்மன் வழிபாடு,
ஆவணியில் விநாயகர், கண்ணன் வழிபாடு, சூரிய நாராயணன் ஞாயிற்றுக்கிழமை விரத வழிபாடு,
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு,நவராத்திரி கொலு வழிபாடு,
ஐப்பசி நரகாசுரனை வதம் செய்த தீபாவளி கொண்டாட்டம், கார்த்திகை முருகன் வழிபாடு,
மார்கழி எல்லா கோயில்களிலும் பஜனை வழிபாடு,
தைப்பொங்கல் பண்டிகை,
மாசி மகம் சிவராத்திரி வழிபாடு,
பங்குனி உத்திரம் முருகன் வழிபாடு
இப்படியே ஒவ்வொரு மாதமும் நமது முன்னோர்கள் இறைவனை வழிபடவும் மன உறுதிப்படவும்,
நடை பயிற்சி நம்மை சோர்வில்லாமல் உற்சாகப் படுத்திக் கொள்ளவும் வகுத்த இறை வழிபாட்டை நாமும் கடைப் பிடித்து நமது வருங்கால சந்ததிகளுக்கும் அதன்படி நடக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை ஔவையார் “ஒப்புரவு வொழுகு” என்று சொல்லி இருக்கிறார். என்றாள் பாட்டி.
கலாவும் புரிந்தது போல் தலையாட்டினாள்.
