13-அஃகஞ் சுருக்கேல்
பண்ணையார் நிலத்தில் நெல், தானியம், காய்கறிகள் என பயிர் செய்வதில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல்.
அறுவடை செய்தவர்களுக்கு பணத்திற்குப் பதில் நெல், தானியம் என பண்ணையார் கொடுக்கச் சொன்னார்.
அளந்து கொடுப்பவர் குறைவாகவே அளந்து கொடுத்து அதில் ஒரு லாபம் சம்பாதித்து கொண்டார்.
இதைக் கண்டும் கேட்க முடியாமல் வேலை ஆட்கள் கொடுத்ததை வாங்கிச் சென்றார்கள்.
கடையிலும் தராசுக்கு அடியில் காந்தத்தை வைத்து குறைவாக அளந்து கொடுத்து ஏமாற்றுவதையும் கண்ட ஔவையார் “அஃகஞ் சுருக்கேல்” என்று பாடிச் சென்றார்.
