18-இடம்பட வீடிடேல்
தலை நரைத்து, நடை தளர்ந்து, வராண்டாவில் அமர்ந்து கொண்டு…. வெற்றிலையை இடித்து வாயில் வைத்து அசை போட்ட ஆச்சி, நினைவுகளையும் அசைபோட்டாள்.
அங்கு உள்ள வீடுகள் ஒரு தெருவில் தலைவாசல் அடுத்த தெருவில் பின் வாசல் முடியும். தேக்கால் செய்த முற்றத்து வீடு. பல அறைகள், மச்சி அடைத்த வீடு.வீடு நிறைய உறவுகள், பிள்ளைகள்.
எல்லாம் படித்து வெளிநாடு, வெளியூர் என போன பின் செட்டியாரும் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார்.
ஆச்சியைப் பார்த்துக் கொள்ள ஒரு குடும்பத்தை முன் வராண்டாவில் தங்க வைத்திருந்தார்கள்.
ஆச்சி நினைத்துப் பார்த்தாள். நான்கு பையன்,இரண்டு பெண் இவர்களுக்கு தனித்தனியாக சாப்பிட, விளையாட, படிக்க என பார்த்து பார்த்து கட்டிய பெரிய வீடு…
கால சக்கர சுழற்சி கால மாற்றம் நாற்காலியில் ஓர் அறையில் சுழல்வதை எண்ணினாள் ஆச்சி .
ஆச்சி சாப்பிடுங்க ஆச்சி எனக் கூப்பிட்ட குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தவள் வீட்டை அளவுடன் கட்டியிருக்கலாம் என்று எண்ணினாள் ஆச்சி.
நகரத்தார் வீட்டை எண்ணியே ஔவையாரும் ‘இடம்பட வீடிடேல்’ என கூறியுள்ளார்.
