5-உடையது விளம்பேல்
பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சாமி செய்ய சிற்பியை தேடினார் மன்னர்.
அப்போது வயதான சிற்பி ஒருவர் தான் செய்வதாக முன்வந்தார்.
அந்த சிற்பி மிகுந்த அனுபவம் மிக்கவர் போல் தோன்றவே அவரிடம் சிலை செய்யும் பணியை மன்னர் ஒப்படைத்தார்.
அப்போது சிற்பி ஒரு நிபந்தனை விதித்தார்.
இந்த அறைக்குள் வேறு யாரும் வரக்கூடாது. நானே திறக்கும் வரை யாரும் கதவை திறந்து உள்ளே வரக்கூடாது.
இது ரகசியமாக இருக்கட்டும் மன்னா எனக்கூறிய சிற்பி கதவை சாத்திக் கொண்டார்.
உள்ளே சென்ற சிற்பி வெளியில் வரவே இல்லை. உள்ளே இருந்து வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.
மன்னருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
உள்ளே சிற்பி வேலை செய்தால் உளி சத்தம் கேட்கும். உணவு உண்ணாமல் எத்தனை நாள் இருப்பார் என்று சந்தேகம் அதிகமாக…
மன்னரிடம் சிற்பி தேவரகசியம் யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொன்னதை மறந்த மன்னன் காவலாளிகளை அழைத்து கதவை திறக்கச் சொன்னார்.
கதவு திறந்தது. திறந்த போது செதுக்கிக் கொண்டு இருந்த சிற்பி மறைந்து விட்டார்.
மன்னன் பதை… பதைத்துப் போய் சிலையைப் பார்த்தார் மூன்று சிலைகள் செதுக்கிய வண்ணம் இருந்தது.
அசரீர ஒலியில் இருந்து சத்தம் வந்தது தேவ ரகசியம் காக்கப் படாததால் இந்த சிலைகள் அப்படியே பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்து வணங்கும் படி ஒலித்தது.
வந்தது தேவ சிற்பி என்பதே உணர்ந்த மன்னர்.
செதுக்கிய நிலையில் அப்படியே பிரதிஷ்டை செய்து வணங்கும் கோயில் பூரி ஜெகநாதர் கோயில்.
ரகசியம் என்றால் அது அப்படியே கடைப்பிடித்து காக்கப்பட வேண்டும். இல்லை என்றால் குழப்பம் தான் வரும் என்பதை உணர்ந்த ஔவையார் “உடையது விளம்பேல்” என்று கூறியுள்ளார்.
